:::: MENU ::::
  • Aissvaryam Natural Products

  • Aissvaryam Home Appliances

  • Aissvaryam Producs

  • Aissvaryam Producs

Aissvaryam


‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’

– என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை.

இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன.

தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும் தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.

பாதிக்கு மேற்பட்ட உணவு

வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.

மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும் அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான்.

குறைந்த நீரே போதும்

உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.

குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.

திட்டமிட்ட புறக்கணிப்பு

பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது.

பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.

பழங்குடி மக்கள், ‘நாகரிகம்’ தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா’ அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.

இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது
சிறுதானியங்களின் மகத்துவங்கள்
கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
வரகு
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது.
இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது.
சாமை
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.
பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.
நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.
வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து, இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல் ரீதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.
கம்பு
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது.
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும்.
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
இதயத்தை வலுவாக்கும்.
சிறுநீரைப் பெருக்கும்.
நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
தாதுவை விருத்தி செய்யும்.
இளநரையைப் போக்கும்.
குதிரைவாலி
குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் அடங்கியுள்ளது. ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
சோளம்
சோளத்தில், ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின், நயசின் ஆகிய சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்:
நீரிழிவு நோய், செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
கண் குறைபாடுகளை சீர் செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
திணை
பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு 6000 விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசி உண்டாக்கும்.
ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.
ராகி (எ) கேழ்வரகு
ராகியின் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும்.
அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்ணை குணபடுத்தும். சர்க்கரை நோய், ரத்த சோகையை குணமாக்குகிறது. உடலுக்கு வலிமை தரும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரோட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகியில், ஆற்றல், கொழுப்பு, உலோகம், கால்ஷியம், பாஸ்பரஸ், அயன், விட்டமின் ஏ, ஆகிய சத்துக்கள் உள்ளன. ராகி, ரத்தத்தை சுத்தி செய்யும். எலும்பை உறுதிப்படுத்தும். சதையை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும். அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
பனிவரகு
பனிவரகில், கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி காம்ளக்ஸ், தாதுக்கள், கொழுப்பு, கலோரிகள், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், கோலின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.
மருத்துவ பயன்கள்:
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும். சருமத்தை மினுமினுக்க வைக்கும். நரை, மூப்பை தள்ளிப்போடும். எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தை பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். கல்லீரல் கற்களை கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு குறைபாடுகளை போக்கும்.
அலர்ஜியை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்களை விரைவில் ஆற்றும். உடல் பருமனை குறைக்கும். மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதால் கர்பிணி பெண்களுக்கு ஏற்றது. மன உளைச்சலை குறைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை போக்கும்.
#கேழ்வரகு #கேப்பை #ராகி
எந்த தானியத்தை விடவும் கேழ்வரகில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறையவும், இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
கேப்பை, ராகி, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் கேழ்வரகு, நம் தேசத்தின் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம்.
கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.
கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.
கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் ஒன்று.
6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை காய்சி கூழ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், கேழ்வரகின் பயனை அடையலாம்
தினை அரிசியின் பயன்கள்:
சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.
தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது.
உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.
இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.பழங்
காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர்.
இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.
தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.
உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.
ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
தினைமா - கஞ்சி - சாதம்
* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.
* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.
* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்
றன.இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.
அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.
சத்துக்கள்
ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புரதம்
தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.
இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.
இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.
மாவுச் சத்து
மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%
சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.
கொழுப்புச் சத்து
தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.
உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.
கனிமச் சத்துக்கள்
இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.
உயிர் சத்துக்கள்
தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.
தினையின் பயன்கள்
உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.
மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர்.
தினையின் தாள்
* இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.
* மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர். தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசயம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்...
ஐஸ்வர்யம் இயற்கை அங்காடியில்
மரச்செக்கு எண்ணைகள், 
நாட்டுச்சர்க்கரை,
பனங்கருப்பட்டி ஆகியன கிடைக்கும்.
தொடர்புக்கு : 9003 595 595
aissvaryam@yahoo.com
Aissvaryam Natural Products


A call-to-action text Contact us